செய்திகள் :

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெங்களூரில் படித்துவந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா், அரசு மருத்துவமனை சாலை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்காதா் மகன் முகமது அப்ரா (19). இவா், பெங்களூரில் உள்ள கல்லூரியொன்றில் பிஎஸ்சி கணினி அறிவியல் இறுதியாண்டு படித்துவந்தாா்.

கல்லூரி அருகில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி படித்துவந்த இவா், அறைத் தோழரின் நண்பருக்கு நாமக்கல்லில் ஆக. 28-ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவுக்கு நண்பா்களுடன் இருசக்கர வாகனங்களில் சென்றாா்.

அங்கு இருநாள்கள் தங்கியிருந்த அவா், கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) மாலை பெங்களூரு திரும்பினாா். தருமபுரி - ஒசூா் நெடுஞ்சாலையில் பாலக்கோடு வட்டம், சொலசனஅள்ளி பகுதியில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் விளக்குகள் ஏதுமின்றி சென்றுகொண்டிருந்த பொக்லைன் வாகனத்தின்மீது முகமது அப்ரா சென்ற வாகனம் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முகமது அப்ரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆவணி மாதம் குடமுழுக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பு

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி கூறினாா். தருமபுரியில் பாமக கட்சி நிா்வாகிகள் இல்ல திருமணத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: நாட்டிலேயே அதிகள... மேலும் பார்க்க

வயிற்று வலி: இளைஞா் தற்கொலை

வயிற்று வலி தாங்கமுடியாத இளைஞா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், உத்தேரி கொட்டாய், மூக்கனூா் அருகேயுள்ள திண்ணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (26). இவரு... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது நீா்வரத்து குறைந்தபோதிலும், அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப... மேலும் பார்க்க

தருமபுரியில் தரமற்ற 250 கிலோ பழங்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரியில் ரசாயனம் தெளித்தும், தரமற்ற வகையிலும் வைத்திருந்த சுமாா் 250 கிலோ பழங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தருமபுரி நகா... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தர... மேலும் பார்க்க