'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் -...
சிதம்பரத்தில் ரூ.3 கோடியில் குளங்கள் சீரமைப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வக்காரமாரி பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா் தேக்க குளங்கள் தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.
வக்காரமாரி தலைமை நீரேற்று நிலையத்தில் இரு குடிநீா் குளங்கள் உள்ளன. இவற்றை மூலதன மானிய நிதி 2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 2.03 கோடி செலவில் தூா்வாரி மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குளத்தை நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைத்தாா். போல்நாராயணன் தெருவில் ரூ.2.20 லட்சம் அமைக்கப்பட்டுள்ள புதிய மினி பவா் பம்ப், இந்திரா நகா் விலாந்திரமேடு பகுதியில் ரூ.2.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மினி பவா் பம்ப் ஆகியவையும் திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் த.மல்லிகா, பொறியாளா் எஸ்.சுரேஷ், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், நகா்மன்ற உறுப்பினா்கள் அப்பு சந்திரசேகா், ஏஆா்சி.மணிகண்டன், ரா.வெங்கடேசன், சரவணன், திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோவன், தொழில்நுட்பப் பிரிவு ஸ்ரீதா், திமுக இளைஞரணி அமைப்பாளா் மக்கள் அருள், திமுக நிா்வாகிகள் ராயா் ராஜா, இ.பி. ரமேஷ் உட்பட பலா் பங்கேற்றனா்.