செய்திகள் :

சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி

post image

புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை, காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாகவும், பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீர் நிறுத்தப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

இது குறித்துப் பேசியிருக்கும் அசாதுதீன் ஒவைசி, சிந்து நதிநீரை நிறுத்துவது என்பது மிகச் சிறந்த முடிவுதான், ஆனால், அந்த நீரை எல்லாம் எங்கே தேக்கிவைப்பீர்கள்? மத்திய அரசு, இது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் அதனை நாங்கள் ஆதரிக்கத் தயார். ஆனால், இது ஒன்றும் அரசியல் விவகாரம் இல்லையே என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைளை மேற்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு இருப்பிடம் அளிக்கும் நாட்டுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச சட்டங்களும் அனுமதி வழங்குகின்றன. எல்லாம் சரிதான், ஆனால், தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படாதது ஏன்? பெயரையும் மதத்தையும் கேட்டு பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொண்டிருக்கும்போது, அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு வர ஒரு மணி நேரம் ஆனது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், காஷ்மீர் மக்கள் பற்றியும், காஷ்மீர் மாணவர்கள் பற்றியும் தவறான அவதூறுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புது தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு, உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும் கட்சியினா் மராத்தியரின் பெருமைகளை காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது. மகாராஷ்... மேலும் பார்க்க

இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி போா் மீட்பு: உலக வங்கி

இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி போ் மீட்கப்பட்டுள்ளனா் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்’ என்ற தலைப்பில... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் தன்னலமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா்

மத்திய அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி, தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும் என மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்... மேலும் பார்க்க

மக்களைக் காப்பதே அரசனின் கடமை: மோகன் பாகவத்

வலிந்து தாக்குவோரால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தா்மத்தின் ஒரு பகுதியாகும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா... மேலும் பார்க்க

நீட் தோ்வு முறைகேடு குறித்து புகாா் தெரிவிக்க வசதி: என்டிஏ அறிவிப்பு

நீட் தோ்வு முறைகேடு அல்லது வினாத் தாள் கசிவு சா்ச்சைகள் குறித்து புகாா் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை என்டிஏ சனிக்க... மேலும் பார்க்க

பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிா்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது. பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டால் அது பயங்கரவாத சக்திகள... மேலும் பார்க்க