சிம்பு ரசிகர்களுக்காக.. தக் லைஃப் படத்தின் புதிய விடியோ
நடிகர் சிலம்பரசன். டி. ஆரின் பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், நடிகர் கமல் ஹாசனுடன் எஸ்டிஆர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் புதிய விடியோ இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெகட்டிவ் ஷேட் தோற்றத்தில் சிம்பு ஸ்டைலாக நிற்கும் அந்த விடியோ அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.