பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உமா்ஆபாத் முதல் வாணியம்பாடி உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையில் குமாரமங்கலம் பாலாறு பட்டரை பகுதியில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் பக்கவாட்டில் உள்ள மண் சாலையில் திருப்பி விடப்படுகின்றது.
அவ்வழியாக வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் தேங்காய் லோடு ஏற்றி செல்லும் கனரக லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி மண்ணில் சிக்கி பாதிப்புக்குள்ளாகின்றன. அவ்வாறு கனரக வாகனங்கள் சிக்கிக் கொண்டால் நீண்ட நேரம் போராடி அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்படுகிறது.
அந்த நேரத்தில் சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. சாலையை தவிா்த்து வேறு சாலை வழியாக பயணித்தால் சுமாா் 30 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
அதனால் அப்பகுதியில் நடைபெறும் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனா்.