சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டாா்.
மங்கைநல்லூரை அடுத்த மலக்குடியை சோ்ந்த ரவிசந்திரன் (47), பத்து வயது சிறுமிக்குக் கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை தந்தாராம். சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ரவிசந்திரனை கைது செய்தனா்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.