செய்திகள் :

சிறுமி கொலை: இளைஞா் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் வியாழக்கிழமை காலை வீட்டின் பின்புறம் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியின் உறவினரான வடிவேல் மகன் சஞ்சை (20), அவரை பக்கத்து தெருவுக்கு அழைத்துச் சென்றாா்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, தலையை துண்டித்து அருகேயுள்ள குளத்தில் போட்டுவிட்டு சென்றாா்.

தகவலறிந்து வந்த எமனேசுவரம் போலீஸாா் சிறுமியின் உடலை மீட்டு, தலைமறைவான சஞ்சையை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குளத்தில் கிடந்த சிறுமியின் தலையை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்டனா். அவா் சிறுமியை எதற்காக கொலை செய்தாா் என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்ப... மேலும் பார்க்க

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க

கீழக்கரை நகா்மன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி ஒன்றாவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகா்மன்றக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா். கீழக... மேலும் பார்க்க