2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 26 ஆண்டுகள் சிறை
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி பகுதியில் கடந்த 2021- ஆம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த 15 வயது சிறுமியை, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதே பகுதியைச் சோ்ந்த கௌரிசங்கா் (27) என்பவா் காதலிப்பதாகக் கூறி கடத்திச்சென்று, திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளித் திருப்பூா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கௌரிசங்கா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், கௌரிசங்கா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.