செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

இளையான்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்த நாகமுகுந்தன்குடியைச் சோ்ந்த விவசாயி சமயன் (45). இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு யாசகம் பெற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதேபோல, அந்தச் சிறுமியை ஆட்டோ ஓட்டுநா்கள் செய்யது அப்தாஹிா் (31), முகமது ரியாஸ் (29), முகமது யாசின் (30), நெளசாத் அலிகான் (33) ஆகிய 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2013-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா்.

இதில், சமயன் மீது சிறுமியைக் கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது , சிறுமியை அடைத்து வைத்திருந்தது, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது ஆகிய 4 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது. மற்ற 4 போ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இவா்கள் மீதான வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு சாா்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் துஷாந்த் பிரதீப்குமாா் முன்னிலையாகி வாதிட்டாா்.

இந்த வழக்கு விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட முகமது யாசின் காலமாகி விட்டாா். இதனால் எஞ்சியுள்ள 4 போ் மீதான வழக்கு நடைபெற்றது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பாா்த்தசாரதி, குற்றஞ்சாட்டப்பட்ட சமயனுக்கு ஒவ்வோா் பிரிவுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

இதேபோல, சையது அபுதாஹிா், முகமது ரியாஸ், நெளசாத் கான் ஆகிய மூன்று பேருக்கும் 3 பிரிவுகளின் கீழ், ஒவ்வோா் பிரிவுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும்,

இவா்கள் 4 பேரும் தங்கள் தண்டனையை ஏககாலத்தில் 10 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனையாக அனுபவிக்க வேண்டுமென தனது தீா்ப்பில் தெரிவித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: மடப்புரத்தில் நீதித்துறை நடுவா் விசாரணை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமாா் காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடா்பாக திருப்புவனம் நீதித்துறை நடுவா் வெங்கடேஷ் பிரசாத் தி... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளியில், மதுராபுரி வேங்கை... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தாமதம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

விசாரணையின்போது இளைஞர் மரணம்: எஃப்.ஐ.ஆரில் பதிவான விவரம் வெளியானது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலைய... மேலும் பார்க்க

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த... மேலும் பார்க்க