சிலைகளுடன் விளையாடும் மெஸ்ஸி..! இன்டர் மியாமியை விமர்சிக்கும் இப்ராஹிமோவிச்!
கிளப் உலகக் கோப்பையில் பிஎஸ்ஜி அணி இன்டர் மியாமியை வீழ்த்தியது குறித்து இப்ராஹிமோவிச் ‘மெஸ்ஸி தோற்கவில்லை இன்டர் மியாமிதான் தோற்றது’ எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
கிளப் உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்ற்றில் பிஎஸ்ஜி அணி இன்டர் மியாமியை 4-0 என வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி நன்றாக விளையாடியும் இன்டர் மியாமி தோல்வியுற்றது.
மெஸ்ஸி தோற்கவில்லை, இன்டர்மியாமிதான்
இது குறித்து முன்னாள் வீரர் இப்ராஹிமோவிச் பேசியதாவது:
மெஸ்ஸி தோற்றாரா? இல்லை, இல்லை. மெஸ்ஸி தவறால் தோற்றுவிட்டதாகக் கூறாதீர்கள். மெஸ்ஸி தோற்கவில்லை, இன்டர் மியாமிதான் தோற்றுவிட்டது.
மெஸ்ஸி சிலைகளுடன் விளையாடினாரே தவிர அவரது அணி வீரர்களுடன் விளையாடவில்லை. ஒருவேளை பாரிஸ், மான்செஸ்டர் போன்ற உண்மையான ஒரு பெரிய அணியில் விளையாடினால், நீங்கள் நிஜமான சிங்கத்தைப் பார்க்கலாம்!
கால்பந்தை நேசிப்பதால் மட்டுமே அவர் விளையாடுகிறார். 99 சதவிகித வீரர்கள் செய்யாததை அவர் இப்போதும் செய்கிறார். ஆனால், அவருடன் இருப்பவர்கள் எதோ சிமெண்ட் மூட்டையை தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல் ஓடுகிறார்கள்.
பந்து நம்மிடம் இல்லாவிட்டால் எப்படி நகர வேண்டுமென பயிற்சியாளருக்கோ, நட்சத்திர வீரருக்கோ, சக வீரர்களுக்கோ புரிவதில்லை. நீங்கள் மெஸ்ஸியை குற்றம் சுமத்துகிறீர்களா? அவர் ரொனால்டோ, எம்பாபே, ஹாலண்ட், என்னுடன் விளையாடும்போது பாருங்கள். பிறகு பேசுங்கள்! ஆனால், இப்போது வேண்டாம்.
சரியான அணியை மெஸ்ஸியிடம் தாருங்கள். அவர் இப்போதும் தனது திறமையினால் திடலைக் கொழுத்துவார். மெஸ்ஸி எப்போதும் மெஸ்ஸிதான். இது இன்டர் மியாமியின் கால்பந்தின் தோல்வி என்றார்.
Messi's former Barcelona teammate Zlatan Ibrahimovic support messi. he says Messi plays with statues, not teammates! If he was in a real team, in Paris, Manchester, in any of the big teams, you'd have seen the real lion.