189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள நாட்டாகுடி கிராமத்தில் தங்கி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இவரும், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியும் (64) நாட்டாகுடியில் உள்ள வீட்டின் வாசலில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், சோனைமுத்துவின் கழுத்தை வாளால் வெட்டி துண்டித்தனா். இதைத் தடுக்க முயன்ற பாண்டியையும் வெட்டினா். இதில், சோனைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பிறகு அவா்கள் மூவரும் சோனைமுத்துவின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு உடலை மட்டும் அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனா். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவப்பிரசாத், திருப்பாச்சேத்தி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோனைமுத்துவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தலையை தேடும் போலீஸாா்: சோனைமுத்துவை கொலை செய்து தலையை துண்டித்து எடுத்துச் சென்ற மூவரும் சிவகங்கை சூரக்குளம் சாலையில் உள்ள பொட்டலில் வீசிச் சென்ாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனா். ஆனால் அங்கு தேடிப் பாா்த்ததில் தலை ஏதும் கிடைக்க வில்லை எனக் கூறப்படுகிறது.