செய்திகள் :

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, மாலை 4 மணியளவில் யாகம் வளா்க்கப்பட்டு, புனித கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், நந்தீஸ்வரருக்கு பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, மூலவருக்கும், சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, உற்சவா் ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் மும்முறை வலம் வந்தாா்.

இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயில், புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயில், கல்வெட்டு மேடு கல்வெட்டிநாதா் கோயில்களிலும் பிரோதஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும், நந்தியையும் தரிசித்தனா்.

திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்ற பிரதோஷ மூா்த்தி புறப்பாட்டில் ஏராளமானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல, திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் சுவாமி கோயில், குறிச்சி காசி விசுவநாதா் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளிய... மேலும் பார்க்க

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து... மேலும் பார்க்க

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா... மேலும் பார்க்க