செய்திகள் :

சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் பங்கேற்பு: அஜீத் தோவல்

post image

சீனாவில் இம்மாத இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான ஆலோசனையின்போது சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31, செப். 1 தேதிகளில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்பதை அஜீத் தோவல் உறுதிப்படுத்தினாா்.

கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கில் 2020-இல் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு இருதரப்பு உறவுகளை மறுகட்டமைப்பதற்கான தொடக்கமாக எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

அதன் தொடா்ச்சியாக இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடா்பான சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதிநிதியாக அஜீத் தோவல் பங்கேற்றிருந்தாா். அப்போது சீன பிரதிநிதியான வாங் யியை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வாங் யி பங்கேற்றாா்.

அப்போது அஜீத் தோவல் பேசியதாவது: ரஷியாவின் கஸான் நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமா் மோடி- அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்புக்குப்பின் இருதரப்பு உறவு புதிய ஆற்றலைப் பெற்றுள்ளது. எல்லையில் அமைதி நிலவுவதுடன் இருதரப்பு உறவுகளை மறுசீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக தியான்ஜின் நகரில் நடைபெறும் எஸ்சிஓ வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி சீனாவுக்கு பயணிக்கிறாா் என்பதை உறுதிப்படுத்துகிறேன் என்றாா்.

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க

இந்திய-சீன நிலையான உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடிசெவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங... மேலும் பார்க்க

நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது: வெளியுறவு அமைச்சகம்

‘யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் பெயரில் நன்கொடை கோரும் சமூக வலைதளப் பதிவு போலியானது’ என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க