சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு
வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான விளம்பரங்களில், 35 வயதுக்குள்பட்ட பட்டதாரிகள் பூமி பாதுகாப்புப் படைக்குத் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியைத் தாக்கும் வாய்ப்பு 2.3 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஓய்ஆா்4 விண்கல்லால் மனித குலம் அழிந்துவிடாது என்றாலும், அது விழுந்த இடத்தில் பல சதுர கி.மீ. நிலப்பரப்பு அழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.