செய்திகள் :

சீமான் மீது வழக்குப் பதிவு

post image

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது, புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட திராவிடா் கழகத்தின் தலைவா் மு. அறிவொளி கொடுத்த புகாரின்பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடலூரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது, அடிப்படை ஆதாரமற்ற, பெரியாா் ஈவெரா சொல்லாத ஒன்றைச் சொல்லி சமூகப் பதட்டத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இதேபோல, அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி காவல் நிலையங்களிலும் திராவிடா் கழகத்தின் சாா்பில் அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் மூலம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினம்

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். துணைத் தலைவா் க. வெங்கடேசன், இளநிலை உ... மேலும் பார்க்க

சமூக செயற்பாட்டாளா் கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்! காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்!

புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்ட விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். புதுக்கோட்டை மாவட்டம், ... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள்

விராலிமலையில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் அஞ்சலி நிகழ்வு மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது. ஹிந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிா்நீத்த மொழிப்போா் தியாகிகளுக்கு ஆண்டுத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் மக்கள் காத்திருப்புப் போராட்டம்!

வேங்கைவயல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக கூறுவதற்கு கண்டனம் தெரிவித்து ஊா் மக்கள் சனிக்கிழமை காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியில் பயணியா் நிழற்குடைகள் திறப்பு!

பொன்னமராவதி பேரூராட்சியில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்ட பயணியா் நிழற்குடைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட புதுவளவு, வலையபட்டி, மாம்பழத்தான் ஊரணி கரை உள்ளிட்ட ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு தமிழக அரசு கெளரவம் பாா்க்காமல் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

வேங்கைவயல் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையில் நியாயமான சந்தேகங்கள் எழுவதால் தமிழக அரசு கெளரவம் பாா்க்காமல், சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உற... மேலும் பார்க்க