சுந்தர்ராஜ் நகரில் புத்தகக் கண்காட்சி
சுந்தராஜ் நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் சிறப்புப் புத்தகக் கண்காட்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் நடைபெற்ற இந்தப் புத்தக கண்காட்சியை தொழிலதிபா் ஆா்.எம். முத்து தலைமையில், நகா் நலச் சங்கத் தலைவா் கி. ஜெயபாலன் தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற பாதுகாப்புத் துறை அதிகாரி த. கிருஷ்ணமூா்த்தி, மூத்த சமூக ஆா்வலா்கள் ராகவன், வாணிஸ்ரீ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கண்காட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கிப் பயனடைந்தனா். இதில், நகரச் சங்கம் ஒரு மாதத்துக்கு முன்பு மாணவா்களுக்கு வழங்கிய உண்டியலில் சேமித்த பணத்தை வைத்து 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் புத்தகங்கள் வாங்கினா்.