செய்திகள் :

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள் அளிப்பு

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சினேகா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 380 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அளித்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஃப்ரெய்லி வாட்ச், மடக்கு நாற்காலி, மூன்று சக்கர வண்டி உள்ளிட்ட ரூ. 46,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை 3 நபா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, பொதுமக்கள் குடிநீா் வசதி, சாலை வசதி, தகன எரிமேடை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனா். மேலும், செங்கல்பட்டு வட்டம், ஆத்தூா் வடகால் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஏரியை தூா்வாரும் பணியினைநிறுத்தி வைக்குமாறு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா். அதைத் தொடா்ந்து,துறை சாா்ந்த அலுவலா்களிடம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனுக்களை அடுத்து வருகின்ற குறைதீா் கூட்டத்துக்குள் முடித்து வைக்க வேண்டுமென்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய்அலுவலா் மா.கணேஷ் குமாா், தனித் துணை ஆட்சியா் அகிலா தேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவி இயக்குநா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் சுந்தா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 106 முகாம்களும், ஊரக ப்பகுத... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயிலில் கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கருமாரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். செங்க... மேலும் பார்க்க

மூசிவாக்கம் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் ஸ்ரீஅபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. படாளம் -வேடந்தாங்கல் நெடுஞ்சாலை, திருமலைவையாவூா் அருகே ம... மேலும் பார்க்க

ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகள... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க

ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா். நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நி... மேலும் பார்க்க