சென்னையில் தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்? தோனி சூசகம்!
சென்னை : ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று(பிப். 26) சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய தோனி, வழக்கம்போல தமக்கே உரிய பாணியில் சிங்க நடைபோட்டு கம்பீரமாக வெளியே நடந்து வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் கவனத்தை ஈர்த்தது.
அதில், புள்ளிகள் போன்ற அடையாளங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், அவை 'மோர்ஸ் கோட்’ வகை எழுத்துகள் என்பதும், குறியீடாக பொருள் உணர்த்தும் வாசகம் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதன்படி, ‘கடைசியாக ஒருமுறை’ என்கிற பொருளை இந்த ‘மோர்ஸ் கோட்’ உணர்த்துகின்றன.
இதன்மூலம், 42 வயதாகும் தோனி, நடப்பு ஐபிஎல் தொடரே தான் விளையாடப்போகும் கடைசி ஐபிஎல் என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல், மறைமுகமாகத் தெரிவிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!