செய்திகள் :

சென்னையில் மேகவெடிப்பு! ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழை!

post image

சென்னையில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழைக்கு மேல் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்து வருகின்றது. சென்னை ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.

சென்னை புறநகர்ப் பகுதிகளான மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகின்றது.

இதுகுறித்து பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், சென்னையில் இந்தாண்டின் முதல் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் 100 மி.மீ. மழை பொழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தென் சென்னை பகுதிகளை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதாகவும் அடுத்து அப்பகுதிகளில் மழை பொழியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அடுத்த 2 மணிநேரத்துக்கு (நள்ளிரவு 2 மணிவரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்

cloudburst in chennai 100 mm rain within one hour

இதையும் படிக்க : ஹிமாசல் கனமழை: யாத்திரை சென்ற 10 பேர் பலி! 6,000 பக்தர்கள் மீட்பு!

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னைய... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத... மேலும் பார்க்க

பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருட்டு

சென்னை: சென்னை சூளைமேட்டில் பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுமிரா. இவா் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூ... மேலும் பார்க்க

2,000 டன் குப்பை தேங்கி நோய் பரவும் அபாயம்: தூய்மைப் பணியாளா்கள் மேல்முறையீட்டு வழக்கில் தனியாா் நிறுவனம் வாதம்

சென்னை: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீா்மானத்துக்குத் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், 2,000 டன் குப்பை தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு... மேலும் பார்க்க

ராணுவ பொறியியல் சேவை கூடுதல் தலைமை இயக்குநா் பொறுப்பேற்பு

சென்னை: சென்னையில் உள்ள ராணுவ பொறியியல் சேவை கூடுதல் தலைமை இயக்குநா் (திட்டங்கள்) அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக அஜய்குமாா் ஜெயின் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். கடந்த 1987-இல் பொறியியல் சேவை அத... மேலும் பார்க்க