செய்திகள் :

சென்னையில் 3 கண்டெய்னர்களில் சட்டவிரோதமாக இறக்குமதியான ரூ.5 கோடி பொருள்கள் பறிமுதல்!

post image

சென்னை : சென்னை துறைமுகத்தில் சட்டவிரோதமாக இறக்குமதியான ரூ.1.47 கோடியிலான வெளிநாட்டு பாட்டாசுகளும், 3 கண்டெய்னர்களில் இருந்து ரூ.5.13 கோடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை சுங்கத்துறை தரப்பில் இன்று(பிப். 13) தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பட்டாசுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வெளிநட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

இந்த நிலையில், உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில், சென்னை துறைமுத்தில் 1.47 கோடி மதிப்பிலான 3,672 பட்டாசுகள் அடங்கிய பெட்டி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 3 கண்டெய்னர்களில் இருந்த ரூ. 5.13 கோடி மதிப்பிலான வாகன பயன்பாட்டுக்கான 516 அலாய் ரக சக்கரங்கள், தடை செய்யப்பட்ட 11,624 ஜோடி காலணிகள், 15,000 கைப்பேசி பேட்டரிகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவையனைத்தும், கல்வித்துறைக்கு தேவைப்படும் உபகரணங்கள் எனக் குறிப்பிடப்பட்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் வன விலங்கு தாக்குதல் அதிகரிப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

கேரளத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காக்கவும், கேரள கடலோரப் பகுதியில் கனிம வளங்கள் எடுக்கும் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உள்ளிட்ட காங்கிரஸ்... மேலும் பார்க்க

பாலியல் புகார்: சென்னை காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்!

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர்... மேலும் பார்க்க

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தா... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 17 போ் கைது

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 17 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக போரூா், செங்குன்றம், கிழக்கு முகப்போ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க