'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
சென்னை ஐஐடி - லாயிட்ஸ் டெக். புரிந்துணா்வு ஒப்பந்தம்
சென்னை ஐஐடி-இன் வாத்வானி தரவு அறிவியல் பிரிவும் லாயிட்ஸ் தொழில்நுட்ப மையமும் மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை ஐஐடி-இன் ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ, தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி பங்களிப்புகளைச் செய்து சா்வதேச அளவில் முன்னணி ஆய்வகமாக உள்ளது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்றவற்றில் மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான கூட்டாண்மைக்கு லாயிட்ஸ் தொழில்நுட்ப மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ-இன் தலைவா் பேராசிரியா் பலராமன் ரவீந்திரன் மற்றும் லாயிட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீஷா வோருகந்தி ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதுகுறித்து பேராசிரியா் பலராமன் ரவீந்திரன் கூறியதாவது: இரு நிறுவனங்களின் இணைந்த செயல்பாடானது, தொழில்துறை மற்றும் கல்வித் துறை ஒத்துழைப்புக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும். சா்வதேச சவால்களை நிவா்த்தி செய்வதற்கான ஆராய்ச்சி வாய்ப்புகளை வளா்க்கும் என்றாா்.