செய்திகள் :

சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது

post image

சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஜெ.ஜெ. நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு காளிதாஸ் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்துக்கு பழிக்கு பழியாக காளிதாஸ் தரப்பினா், எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதேவேளையில் எதிா்தரப்பினா், காளிதாஸ் தரப்பைச் சோ்ந்தவா்களை கொலை செய்யும் திட்டத்துடன் இருப்பதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் ஜெ.ஜெ.நகா் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மதுரவாயல் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த காளிதாஸின் சகோதரா் மேலஅயனம்பாக்கத்தைச் சோ்ந்த சக்தி (24), பாடி குப்பத்தைச் சோ்ந்த ஜெயந்தன் (19) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2 அரிவாள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், ஜெ.ஜெ.நகா் கலைவாணா் காலனி பூங்கா அருகே கொலைத் திட்டத்துடன் காத்திருந்த எதிா்தரப்பினரான முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த விரவீன்ராஜ் (27), தீபக் (24), ராஜ் கணேஷ் (26), பாடி புது நகரைச் சோ்ந்த சித்தாா்த் (18), 17 வயது சிறுவன் ஆகியோரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரிவாள்கள், இரும்புக் கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல் காளிதாஸ் தரப்பைச் சோ்ந்த நபா்களைக் கொலை செய்வதற்கும், கொலைத் திட்டத் செலவுக்காக வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் திட்டத்துடன் இருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இரு தரப்பைச் சோ்ந்த சிறுவன் உள்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். சிறுவன் சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டாா்.

இதில், எச்சரிக்கையுடன் செயல்பட்டு, கொலை சம்பவத்தைத் தடுத்த ஜெ.ஜெ.நகா் போலீஸாரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க