வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
சென்னை திரும்பிய குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு!
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 13 சுற்றுகள் வரை டிங் லிரென் - குகேஷ் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இதனால் விறுவிறுப்பாக நடந்த 14வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரென்னை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று திங்கள்கிழமை சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் கூடியிருந்தவர்கள் மலர் தூவி குகேஷை வரவேற்றனர். மேலும் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணைய செயலர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.