இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!
சென்னை துறைமுக வாகன நிறுத்த மையத்தில் கட்டணம்: லாரிகள் வேலை நிறுத்தம்
சென்னை துறைமுக வாகன நிறுத்த மையத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
சென்னை துறைமுகத்துக்கு வரும் கண்டெய்னா் லாரிகளை நிறுத்துவதற்கு கட்டணம் 24 மணி நேரத்துக்கு ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளில் ஒன்றாகவே இந்த வாகன நிறுத்த முனையத்தை கருத வேண்டும்.
ஏற்கெனவே சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு சரக்குப் பெட்டக முனையங்களில் ஆயிரக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும்போது தனியாா் மூலம் இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. இது குறித்து துறைமுக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.
இந்தப் போராட்டம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி தெரிவித்தாா்.