செய்திகள் :

சென்னை - பகத் கீ கோதி இடையே புதிய ரயில் சேவை: ரயில்வே அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி (ஜோத்பூா்) இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் செகாவாத், முரளிதா் மோகல், எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

மகாராஷ்டிரம், தமிழ்நாடு மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இரு ரயில்களை வழங்கிய பிரமதருக்கு நன்றி. கடந்த 10 ஆண்டுகளில் 1,300 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 34,000 கி.மீ. ரயில்வே வழித்தடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புணே - லூனவாலா இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளாா் என்றாா் அவா்.

சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற தொடக்க விழாவில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், புணேயில் இருந்து புறப்பட்ட ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தற்போது தெற்கு ரயில்வேக்குள்பட்ட சென்னை, பெங்களூரு, மைசூா், கோவையிலிருந்து மட்டும் 8 விரைவு ரயில் ராஜஸ்தானுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரயில், தமிழ்நாடு - ராஜஸ்தான் இடையே வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும்.

இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, சபா்மதி, ஜலோா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், துணை பொது மேலாளா் கௌசல் கிஷோா், ரயில்வே கோட்ட மேலாளா் விஸ்வநாத் பி ஈா்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள், ராஜஸ்தானி சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்றும் இதை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன... மேலும் பார்க்க

காலமானாா் குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன்

குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானாா். கேரள மாநிலம், சொ்புளசேரியில் கடந்த 1935 -ஆம் ஆண்டு பிறந்த ஈ.எஸ்.ஹரிஹரன் முனைவா் பட்டம் (டி.... மேலும் பார்க்க

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க