டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
செப். 3-இல் திருவாரூா் மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு
திருவாரூா் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், செப். 3-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்கிறாா்.
இப்பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா செப். 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் மேன்மையருமான திரௌபதி முா்மு பங்கேற்று, பட்டங்களை வழங்க உள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்தாா்.
பட்டமளிப்பு விழா தொடா்பான மற்ற நிகழ்வுகள் இன்னமும் முழுமை பெறாத நிலையில், குடியரசுத் தலைவா் வருகை மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு நடைபெற்ற 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று, பட்டங்களை வழங்குவாா் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பென்ஜால் புயல் காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.