"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!
செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஆக்.13) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா்
சோ்க்கை கலந்தாய்வு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.11-இல் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஆக்.13) நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகள் காலை 9 மணிக்கு வரவேண்டும்.
சோ்க்கைக் கட்டண விவரம்:
எம்.ஏ., எம்.காம்., பாடப்பிரிவுகளுக்கு ரூ.895-ம், எம்.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பாடப்பிரிவுகளுக்கு ரூ.1035-ம், எம்.எஸ்.சி. கணிதத்துக்கு ரூ.935 - ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட கல்விச் சான்றிதழ்கள்,
ஜாதி சான்றிதழ், இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம் பெற்றோா் கையொப்பத்துடன் கூடியது ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
அனைத்துச் சான்றிதழ்களிலும் மூன்று நகல்கள் மற்றும் 3 புகைப்படங்களை எடுத்து வரவேண்டும்.
சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும்,
இன ( இா்ம்ம்ன்ய்ண்ற்ஹ்) அடிப்படையிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.