பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சித்ராதேவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.நந்தினி வரவேற்றாா். மாநில இணைச் செயலாளா் செ.கலையரசி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் 11 மாத ஒப்பந்த முறையில் பணியமா்த்தும் முடிவைக் கைவிட வேண்டும்.
கரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட செவிலியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சோ்ந்த 15 போ் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் வே.சரவணனிடம் மனு அளித்தனா்.