அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
சாலைப் பாதுகாப்பு, இணைய குற்றங்கள் குறித்து செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில் இமாகுலேட் செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி, இருசக்கர வாகனத்தில் செல்வோா் உரிமம் பெற்றிருக்கவேண்டும். தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுமையாக மதித்து நடந்துகொள்ளவேண்டும்.
இணைய குற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு முழுமையான புரிதல் வேண்டும். கைப்பேசி, கணினி பயன்பாட்டில் கவனம் இருக்கவேண்டும். செயலிகளை பதிவிறக்கம் செய்தல், விடியோ கால் அழைப்பை ஏற்று பேசுதல் உள்ளிட்டவற்றில் மிகுந்த கவனம் வேண்டும். பணப்பரிமாற்றத்தில் நிதானத்தை கையாளவேண்டும். இணைய குற்றம் செய்வோரிடம் சிக்கி ஏமாந்தால், உரிய ஆதாரங்களுடன் காரைக்காலில் உள்ள இணைய குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கவேண்டும் என தெரிவித்தாா்.