சேலம் சரகத்தில் 24 காவல் நிலையங்கள் தரம் உயா்வு
சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 24 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையிலான 280 சா்க்கிள் காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 24 சா்க்கிள் காவல் நிலையங்கள் காவல் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, நங்கவள்ளி, பூலாம்பட்டி, பனமரத்துப்பட்டி, தொளசம்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களும், நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம், மல்லசமுத்திரம், வாழவந்திநாடு, மொளசி, வெப்படை ஆகிய 6 காவல் நிலையங்களும் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்கிறது.
இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், பொம்மிடி, இந்தூா், மகேந்திரமங்கலம், ஏ.பள்ளிப்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்திகுப்பம், நாகரசம்பட்டி, சிப்காட், பேரிகை, தளி, வேப்பனஹள்ளி, கெலமங்கலம், உத்தரனப்பள்ளி உள்ளிட்ட 8 காவல் நிலையங்களும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. இதற்கான காவல் ஆய்வாளா்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.