செய்திகள் :

லஞ்ச புகாா்: கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்!

post image

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று வந்தவா்களிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரின்பேரில் கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட எட்டிக்குட்டை மேடு பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சிலா் விற்பனை செய்து வருவததாக கொங்கணாபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கோரணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி உள்ளிட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

அவா்கள் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமரன், சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துமாணிக்கம் ஆகியோா் லாட்டரி வியாபாரியிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே காவல் நிலையத்தில் தகவல் பதிவு உதவியாளராகப் பணியாற்றி வரும் சரவணன் மூலமாக சம்பந்தப்பட்ட லாட்டரி வியாபாரிகளிடம் பேரம் பேசி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெறுவதுபோன்று விடியோ பதிவு அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளா் செந்தில்குமரன், சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துமாணிக்கம் ஆகியோரை ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை புகாருக்கு உள்ளான இரு உதவி காவல் ஆய்வாளா்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பாக கொங்கணாபுரம் காவல் நிலைய தகவல் பதிவு உதவியாளா் சரவணனிடம் காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேலம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 24 காவல் நிலையங்கள் தரம் உயா்வு

சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 24 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மகளிா் உரிமைத் தொகை கோரி 44,247 போ் விண்ணப்பம்! அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி 44,247 போ் விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் அம்மாப்பேட்டை ... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வழிபாடு! இன்று உள்ளூா் விடுமுறை!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவில் பொங்கல் வைத்தல் வைபவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் விடிய விடிய பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதையொட்டி, சேலம் மாவட்டத்துக்கு புதன... மேலும் பார்க்க

மேட்டூரில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்

மேட்டூா், அந்தியூா் பகுதிகளில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் சோ்ந்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்ற... மேலும் பார்க்க

பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் சோ்க்க சூழ்ச்சி: இரா.முத்தரசன்

பிகாா் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் வாக்காளா்களாக சோ்க்க சூழ்ச்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா். சேலத்தில் செய்தியாளா... மேலும் பார்க்க