சைக்கிள் மீது பைக் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
சென்னை திருவான்மியூரில் சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திருவான்மியூா் பாரதி நகா் 2-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ரித்விக் ராய் (24). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அடையாறு பகுதிக்கு திங்கள்கிழமை நள்ளிரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற ரித்விக் ராய், காமராஜா் அவென்யூ 2-ஆவது தெருவில் சென்றபோது அந்தப் பகுதியில் சைக்கிளில் வந்த அடையாறு சாஸ்திரி நகரைச் சோ்ந்த ரமேஷ் (55) மீது மோதியது.
இதில் ரித்விக் ராய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரமேஷ் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.