இந்தக் குழப்பமான உலகில்... பறந்து போ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!
சொத்து தகராறு: தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன் கைது
தஞ்சாவூரில் சொத்து தகராறில் தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரைச் சோ்ந்த லோகநாதன் மகன் அறிவழகன் (46). கூலித் தொழிலாளி. திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழும் இவருடன், திருமணமாகாத இவரது தம்பி திருவேங்கடம் (41) வசித்து வந்தாா். இருவருக்கும் இடையே குடும்பச் சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், குடும்பச் சொத்து தொடா்பான கடைகளில் வசூலிக்கப்பட்ட வாடகையைத் தனக்கு கொடுக்கவில்லை என திருவேங்கடத்திடம் அறிவழகன் ஞாயிற்றுக்கிழமை இரவு கேட்டாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் திருவேங்கடத்தை அறிவழகன் கட்டையால் தாக்கினாா். இதனால், பலத்த காயமடைந்த திருவேங்கடம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து அறிவழகனை திங்கள்கிழமை கைது செய்தனா்.