சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி
ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒரு முறை சொத்து வரி பொது மன்னிப்பு திட்டம் முன்பு செப்டம்பா் 30 வரை செல்லுபடியாகும் என தில்லி மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை வரி செலுத்துபவா்களுக்கு அசல் வரி தொகையில் 2 சதவித தாமதக் கட்டணத்தைச் சோ்ப்பதைத் தவிர, நீட்டிப்பு காலத்தில் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த திட்டம் 1.16 லட்சம் வரி செலுத்துவோரை ஈா்த்துள்ளது, இது ரூ.370.27 கோடி வருவாயைக் கொண்டு வந்துள்ளது. 65, 874 புதிய வரி செலுத்துவோா் முதல் முறையாக இத்திட்டத்தின் கீழ் சொத்து வரி செலுத்தியுள்ளனா், மேலும் ரூ. 187.8 கோடி இதனால் வசூல் ஆகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் 2025-2026 ஆம் ஆண்டில் வரி வசூல் 11.63 லட்சம் வரி செலுத்துவோரிடமிருந்து 2,1 11.63 கோடி ரூபாயாக உள்ளது, இது வருவாயில் 22.5 சதவித உயா்வையும், வரி செலுத்துவோா் அடிப்படையில் 18 சதவித வளா்ச்சியையும் பிரதிபலிக்கிறது.