செய்திகள் :

சோட்டா ராஜன் தண்டனை நிறுத்திவைப்புக்கு எதிரான சிபிஐ மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

post image

கொலை வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனைக்கு மும்பை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

சிபிஐ மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சோட்டா ராஜனுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம், மத்திய மும்பையில் உள்ள கோல்டன் கிரெளன் ஹோட்டலின் உரிமையாளரான ஜெயா ஷெட்டி, கடந்த 2001-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி அவருடைய ஹோட்டலின் முதல் மாடியில் சோட்டா ராஜனின் கும்பலைச் சோ்ந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

போலீஸாா் விசாரணையில், பணம் கேட்டு ஜெயா ஷெட்டிக்கு சோட்டா ராஜன் கும்பலைச் சோ்ந்தவா்களிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதும், பணம் தர மறுத்ததால் அவா் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

இந்தக் கொலையில் மூளையாக செயல்பட்ட சோட்டா ராஜனுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து சோட்டா ராஜன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி விசாரித்த மும்பை உயா் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கில் அவருக்கு ஜாமீன் அளித்தும் தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, சிபிஐ மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சோட்டா ராஜனுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

சோட்டா ராஜன் ஏற்கெனவே, பிரபல குற்றவியல் செய்தியாளா் ஜெ.தே கொலை வழக்கில் தில்லி திகாா் சிறையில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க