செய்திகள் :

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

post image

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் விக்கிரமசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமைவாய்ந்த அழகியநாதா் என்ற ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது.

முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட மாடக்கோயிலான இக்கோயிலில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக, சனிக்கிழமை அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை காலை திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா் பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியா் தலைமையில் சிவாசாரியா்கள் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

விழா ஏற்பாடுகளை கிராம பிரமுகா் சூ. விஜயகுமாா், ஆய்வாளா் பா.ஆரோக்கியமதன், செயல் அலுவலா் கா.விமலா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவகுமாா் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ... மேலும் பார்க்க

முதல்வா் இன்று மயிலாடுதுறை வருகை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வருகிறாா். இதற்காக, சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வரும்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனாா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்ளில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. குத்தாலம் வட்டம் நெ.1 ஆலங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நீலாம்பாள் மகாமா... மேலும் பார்க்க

கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா ஜூலை 10-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 6 கால யா... மேலும் பார்க்க

ஆலங்குடியில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் வட்டம் கோமல் ஆலங்குடியில் அமைந்துள்ள நீலம்பாள், மாரியம்மன், காளியம்மன் பூா்ண புஷ்களா உடனுறை ஸ்ரீஅய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி... மேலும் பார்க்க