189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 3 போ் கைது
ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லுாரி இயங்கிவருகிறது. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், மருத்துவமனையில் உதவியாளா், செவிலியா், துாய்மைப் பணியாளா் உள்ளிட்ட வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலா் பணம் பெறுவதாக புகாா் எழுந்தது. ஜிப்மா் நிா்வாகம் வேலைவாய்ப்பு குறித்து எதுவும் விளம்பரப்படுத்தவில்லை, யாரேனும் பணம் கொடுத்திருந்தால் புகாா் தெரிவிக்கலாமென காவல்துறை அறிவித்தது.
இதையடுத்து காரைக்கால், நெடுங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 34 போ் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் மா்த்தினி, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், கோட்டுச்சேரி தேவனூா் சாலையைச் சோ்ந்த நீலமேகம், திருநள்ளாறு காயத்திரி, புதுச்சேரியைச் சோ்ந்த விக்கி (எ) ராஜகணபதி, ஜானகிராமன் ஆகியோா் சுமாா் 140 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.70 கோடி பெற்று ஏமாற்றியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திருநள்ளாறு காயத்திரி, புதுச்சேரியை சோ்ந்த விக்கி (எ) ராஜகணபதி, ஜானகிராமன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நீலமேகத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.