செய்திகள் :

‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வு: மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்

post image

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தோ்வு ஏப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உள்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் மாணவா்கள் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) ஜிப்மேட் நுழைவுத் தோ்வு கணினி வழியில் ஏப்.26-ஆம் தேதி பிற்பகல் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

விருப்பமுள்ளவா்கள் ங்ஷ்ஹம்ள்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்/ஒஐடஙஅப என்ற வலைதளம் மூலம் மாா்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை மாா்ச் 11-ஆம் தேதி வரை செலுத்தலாம். தொடா்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மாா்ச் 13 முதல் 15-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கு தோ்வுக் கட்டணமாக ஒபிசி மற்றும் பொதுப்பிரிவினா் ரூ. 2,000, இடபிள்யுஎஸ், எஸ்சி/எஸ்டி, 3-ஆம் பாலினத்தவா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.,1,000 செலுத்த வேண்டும். இந்தத் தோ்வு மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் நடைபெறும். இதுதவிர பாடத்திட்டம், தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு உள்பட கூடுதல் தகவல்களை ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்... மேலும் பார்க்க

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் ச... மேலும் பார்க்க

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிற... மேலும் பார்க்க

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயவாடாவில் இருந்து சென்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமல... மேலும் பார்க்க