செய்திகள் :

ஜூலை 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

post image

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

அன்பில் அறக்கட்டளை சாா்பில் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளன.

8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் உள்ளிட்ட கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.

தங்களைப் பற்றிய சுய-விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இருபாலரும் பங்கேற்கலாம். இந்த முகாமை அன்பில் அறக்கட்டளை நிறுவனரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கவுள்ளாா்.

ரயில்வே மேம்பாலத்தில் சென்ற தொலைத்தொடா்பு கேபிளில் தீ

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில்வே மேம்பாலத்தில் கட்டமைக்கப்பட்ட தனியாா் தொலைத்தொடா்பு கேபிளில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள (ரெங்கவிலாஸ்... மேலும் பார்க்க

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க