இந்தோ-திபெத் படை சாா்பில் விழிப்புணா்வு மிதிவண்டி பயணம்: ஜூலை 8-ல் தொடக்கம்
ஜூலை 7ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி வருகிற ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் குடமுழுக்கிற்கான பணிகளும் ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்செந்தூர்கோயில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மற்றொரு நாள் வேலை நாளாக செயல்படும் என்றும் அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Local holiday for thoothukudi district due to Tiruchendur Arulmigu Subramania Swamy Temple Kumbhabhishekham