"இந்த வெற்றிக்குப் பிறகு நிறைய படம் வரும்!" Director Ram | Siva | Paranthu Po
ஜூலை 7 இல் சோளிங்கர் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் குடமுழுக்கிற்கான பணிகளும் ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடுசெய்யும் பொருட்டு ஜூலை 19 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.