18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்ச்செல்வன் பேசியது: பிப். 24-ஆம் தேதி முன்னாள் முதல்வா் அதிமுக ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும். அன்றைய தினம் கட்சி கொடியேற்றி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறி ,சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற அனைவரும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
அமைப்புச் செயலா் அ. அருணாச்சலம், முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆா்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் என்.கே. கா்ணன், சிவப்பிரகாசம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.