ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!
இங்கிலாந்து வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.
தேசிய அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்பவுள்ளார். அவர் நாளை மறுநாள் (மே 24) தாயகம் திரும்பவுள்ளார். அவருக்குப் பதிலாக நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!
இது தொடர்பாக ஆர்சிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்குப் பதிலாக அணியில் டிம் செய்ஃபர்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேக்கோப் பெத்தேல் தேசிய அணிக்காக விளையாடுவதற்காக நாளை மறுநாள் தாயகம் திரும்பவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்னும் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது. நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி ஹைதராபாதை எதிர்த்து விளையாடுகிறது. அதன் பின், வருகிற மே 27 ஆம் தேதி லக்னௌவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.
When firepower meets form, we get an absolutely destructive combo.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 22, 2025
Tim's ready to take off, and WE. CAN. NOT. WAIT! #PlayBold#ನಮ್ಮRCB#IPL2025pic.twitter.com/OFQ2j1qb8R
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்புகிறார். ஆர்சிபி அணிக்காக அவர் பிளே ஆஃப் போட்டிகளில் இடம்பெறமாட்டார்.
மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள டிம் செய்ஃபெர்ட் இதுவரை 66 டி20 போட்டிகளில் விளையாடி 1,540 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பாக அவர் ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஆர்சிபி அணிக்காக ரூ.2 கோடிக்கு டிம் செய்ஃபெர்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.