செய்திகள் :

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டம், கல்விக் கொள்கை போன்ற பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள லால் சாகர் நகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

பாரத மாதா உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கூட்டத்தை தொடங்கினர்.

பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட 32 அமைப்புகளைச் சேர்ந்த 320 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வருகின்ற விஜயதசமி (அக். 2) அன்று ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. நாடு முழுவதும் பெரிய அளவிலான நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. நாக்பூரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதேபோல், பாஜக தலைவர் தேர்தலும் ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு முன்பு வருவதால் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

RSS's All India Coordination Meeting of the organisation begun

இதையும் படிக்க : பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட... மேலும் பார்க்க

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க