செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்கம்: ``கீழடியில் 10 அடி தோண்ட அனுமதி தராத ஒன்றிய அரசு...'' - மக்களவையில் கொதித்த சு.வெ

post image

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும், சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள இடம்

இந்த நிலையில், மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன், `அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் அழிக்கும் முயற்சி' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் உரையாற்றிய சு. வெங்கடேசன், ``ஒன்றிய அரசு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதித்திருக்கிறது. அந்த அனுமதியை, ஏல உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அரியவகை நிலம் அரிட்டாபட்டி நிலம்.

சு. வெங்கடேசன்

அங்கே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால படுக்கை இருக்கிறது. 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டு இருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண சிற்பம் இருக்கிறது. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் கட்டிய சிவன் குகைக் கோயில் இருக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்கால பாண்டியர்கள் அமைத்த ஏரி இருக்கிறது. வரலாறு முழுக்க தனது மேனியில் வரலாற்றுச் சின்னங்களை ஏந்தியிருக்கும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கின்ற ஒன்றிய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும். இமயம் எப்படி இந்தியாவைக் காத்து நிற்கிறதோ, அதுபோல இமயன் என்ற சொல் இருக்கின்ற அரிட்டாபட்டியை நாங்கள் காத்து நிற்போம்.

கீழடியில் 10 அடி குழி தோண்ட அனுமதி கொடுக்காத ஒன்றிய அரசு, இன்று தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் பல நூறு கி.மீ சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கிறது என்றால், இது தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் ஒருசேர அழிக்கின்ற முயற்சி. இந்த முயற்சியைத் தமிழ்நாடு மக்கள் எதிர்ப்பார்கள். அங்கிருக்கும் அனைத்து கிராமங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஸின்க் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்." என்று வலியுறுத்தினார்.

சந்திரபாபு நாயுடு வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 6 மாதங்களில், முன்பு சந்திரபாபு நாயுடு தொடர்பான வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட... மேலும் பார்க்க

South Korea: `நேற்று ராணுவ ஆட்சி அமல்... இன்று வாபஸ்' - என்ன நடக்கிறது தென் கொரியாவில்?!

'இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், ரஷ்ய - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி... என ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் உலக அரசியல் களத்தை இன்னும் பரப்பாக்கியது, தென் கொரியாவின் 'ராணுவ ஆட்சி அமல்' அறிவிப்ப... மேலும் பார்க்க

UP: ``என் கடமையை தடுக்கின்றனர்'' - தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

ஹாஜி ஜாமா பள்ளிவாசல் வழக்கைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் சம்பால் பகுதியில் வன்முறை எழுந்தது. காவல்துறையினர் மற்றும் பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுக்கள் இடையி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்... முடிவுக்கு வந்த இழுபறி..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீ... மேலும் பார்க்க

பஞ்சாப்: மத தண்டனைக்குள்ளான முன்னாள் துணை முதல்வர்; துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பியது எப்படி?

பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். இந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல். 2007 - 2017-வரை சிரோமணி அகாலி தளம் கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருந்தது. ... மேலும் பார்க்க

Railway union election: `என் நிர்வாகிகள் தவறாக நடந்திருந்தால் மறந்துடுங்க!' - SRMU கண்ணையா

ரயில்வேயில் தொழிற்சங்கங்கங்களை அங்கீகரிப்பதற்கான தேர்தல் நாடு முழுக்க இன்றும் நாளையும் நடக்கிறது.ஆறு வருடத்துக்கொரு முறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் 2019-லேயே நடந்திருக்க வேண்டியது. ரயில்வே நிர்வாகம்... மேலும் பார்க்க