டாக்கா, கராச்சி... உலகின் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியல் வெளியீடு!
தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) 2025 ஆம் ஆண்டுக்கான குறைந்த வாழ்க்கைக்கு உகந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டது.
உலக அளவில் 173 நகரங்களை தரவரிசைப்படுத்திய இந்த பட்டியல், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் உலகில் வாழதகுதியற்ற நகரங்களின் பட்டியலில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தின் தலைநகர் டக்கா மூன்றாவது இடத்தையும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் அல்ஜீரியாவின் அல்ஜீரியஸ் வாழத் தகுதியற்ற நகரங்களில் நான்காவது ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவின் நகரங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டில் வாழ மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன், முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் மிகவும் வாழக்கூடிய 10 நகரங்களின் பட்டியல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. கோபன்ஹேகன், டென்மார்க்
2. வியன்னா, ஆஸ்திரியா
2. சூரிச், சுவிட்சர்லாந்து
4.மெல்போர்ன், ஆஸ்திரேலியா
5. ஜெனீவா, சுவிட்சர்லாந்து
6. சிட்னி, ஆஸ்திரேலியா
7. ஒசாகா, ஜப்பான் 7. ஆக்லாந்து, நியூசிலாந்து
9. அடிலெய்டு, ஆஸ்திரேலியா
10. வான்கூவர், கனடா