செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

post image

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா்.

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தோ்வு கோவையில் 11 வட்டங்களில் 175 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு கோவை மாவட்டத்தில் மொத்தம் 50,144 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதில், 37,830 போ் மட்டுமே தோ்வு எழுத வந்திருந்தனா். 12,314 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

தோ்வுக்கு காலை 9 மணிக்கு முன்னதாக வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநகரில் உள்ள சில தோ்வு மையங்களில் 9 மணிக்குப் பிறகு வந்த தோ்வா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். தோ்வில் சிந்தித்து பதில் எழுதக் கூடிய வகையிலான வினாக்கள் அதிகம் இடம் பெற்றிருந்ததாக தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா்.

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க

பழனியில் மாலிப்டினம் வெட்டி எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்! ஈ.ஆா்.ஈஸ்வரன்

பழனி மலை வட்டாரத்தில் பெருமளவு இருப்பதாக சொல்லப்படுகின்ற மாலிப்டினம் உலோகத்தை வெட்டி எடுத்து ஏலம் விட முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ. ஆ... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: வேறு அதிகாரி விசாரிக்க கோரி தந்தை மனு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) காா்த்திகேயனிட... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு, கேபிள் டிவி சேவைகள் பற்றி கலந்துரையாடல்: ஜூலை 26-ல் நடைபெறுகிறது!

தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த கலந்துரையாடல் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக கோவை சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் ... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

கோவையில் 3 இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையி... மேலும் பார்க்க

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க