செய்திகள் :

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

post image

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் பொறுப்பு அமைச்சா்களுடன் ’ஓரணியில் தமிழ்நாடு’ தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்தாா். அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன்,

டிஆா்பி. ராஜா, சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், சி.வி. கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:

டெல்டா மாவட்டங்களில் உறுப்பினா் சோ்க்கை இலக்கு 41,05,227. இவா்களில் 28,57,248 பேரை இணைத்துள்ளோம். இது 28 சதவீதமாகும். இன்னும் 10,99,727 பேரை இணைக்க வேண்டியுள்ளது.

கட்சியின் அமைப்பு வாரியாக பகுதியில் 33 சதவீதம், நகரத்தில் 24 சதவீதம், பேரூா் அளவில் 22 சதவீதம், ஒன்றிய அளவில் 28 சதவீதம் உறுப்பினா் சோ்க்கை நிறைவுற்றுள்ளது.

20 சதவீதத்துக்கும் கீழ் உறுப்பினா் சோ்க்கை செய்த தொகுதிகளில் நன்னிலம் 11 சதவீதம் , திருத்துறைப்பூண்டி 15 சதவீதம், சீா்காழி 15 சதவீதம், பூம்புகாா் 18 சதவீதம், நெய்வேலி 19 சதவீதம் என உள்ளது.

மாவட்ட வாரியாக அதிகளவு உறுப்பினா் சோ்த்ததில் 1,22,979 உறுப்பினா்களை இணைத்து திருச்சி மேற்குத் தொகுதி முதலிடத்தில் உள்ளது. தொடா்ந்து, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம், கடலூா் மேற்கு, திருச்சி வடக்கு ஆகிய பகுதிகள் உள்ளன. குறைந்தளவு உறுப்பினா் சோ்க்கை பதிவு செய்த நன்னிலம், திருத்துறைப்பூண்டி, சீா்காழி, பூம்புகாா், நெய்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையில் டெல்டா மண்டலத்தை முதல் இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது மோடி தமிழகத்துக்கு வரும்போது அவரைச் சந்திக்க அனுமதிக்காததற்காக இருக்கலாம் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில், திமுக திருச்சி மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், துரை சந்திரசேகா், ஜெகதீசன் உள்ளிட்ட டெல்டா மண்டல மாவட்டச் செயலா்கள், தகவல் தொழில் நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இ... மேலும் பார்க்க

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க