'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு
திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி (42). இவா், பொதுத் துறை வங்கியில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் புதன்கிழமை காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பாா்த்தபோது,
ஒன்றேகால் பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.