'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்
சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதன்படி, சமயபுரம், இருங்களூா், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூா், மண்ணச்சநல்லூா், திருவெள்ளறை, மருதூா், ரத்தினங்குடி, கூத்தூா், நொச்சியம், ராஜகோபால் நகா், மேல்பத்து, பாச்சூா், வி. துறையூா், மாடக்குடி, ஈச்சம்பட்டி, எடயப்பட்டி, தத்தமங்கலம், அய்யம்பாளையம், சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி, மணியம்பட்டி, சாலப்பட்டி, சிறுபத்தூா், ராசாம்பாளையம், தழுதாளப்பட்டி, அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், காளவாய்ப்பட்டி, கன்னியாக்குடி, வலையூா், பாலையூா், ஸ்ரீபெரும்புதூா், தேவிமங்கலம், கட்டயன்பள்ளம், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
இதேபோல, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட அம்பிகாபுரம், அரியமங்கலம், எஸ்ஐடி, ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்ஜிஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், மேலகல்கண்டாா் கோட்டை, கீழ கல்கண்டாா் கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் இண்டஸ்ட்ரி, சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம், விண் நகா் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.